இக்கோயில் திருச்சி மாவட்டம், மண்ணச்சநல்லூர் வட்டம், திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்ததுள்ளது. திருச்சியிலிருந்து துறையூர் செல்லும் பேருந்து வழியில் 20 கிமீ தொலைவில் மண்ணச்சநல்லூர்க்கு அருகில் திருவெள்ளரை ஊராட்சியில் அமைந்துள்ள இத்திருத்தலத்திற்கு, திருவரங்கத்திலிருந்து உத்தமர் கோயில் வழியாகவும் பேருந்தில் செல்லலாம். தங்குவதற்கு வசதியான விடுதிகள் இல்லாததால் திருச்சியிலிருந்தும் செல்லலாம். பெரிய மதில்களுடன் கூடிய விசாலமான கோயில். இக்கோயில் காண்போரைப் பிரமிக்க வைக்கும். நந்தவனங்கள்,கிணறு இன்றும் பராமரிக்கப்பட்டு வருகிறது. இந்த கோயிலின் பின்பகுதியில் பாறையைக் குடைந்து தூண்களுடன் இரு சிறு அறைகள் குகை போலக் காணப்படுகின்றன.
மூலவர்புண்டரீகாட்சன் - செந்தாமரைக் கண்ணன், நின்ற கோலத்தில் காட்சி அளிக்கின்றார். தயார் - செண்பகவல்லி தாயார் எனும் பங்கயச் செல்விக்கு தனி சன்னதி உண்டு. தாயாரின் உற்சவமூர்த்திக்கு பங்கஜவல்லி என்ற திருநாமம் பெயர் காரணம்: இந்த திருத்தலம் ஸ்ரீரங்கம் பெருமாள் கோயிலை விட மிகவும் பழமையானது. அதனால் ஆதிவெள்ளறை என்றும் அழைக்கப்படுகிறது.
திருக்கோயிலில் திவ்யகந்த, க்ஷீரபுஷ்கரிணிகள், மணிகர்ணிகா என்று 7 தீர்த்தங்கள் கோயிலுக்குள்ளேயே அமைந்துள்ளது.விமானம்:விமலாக்ருதி விமானம்.- கோயில் கோபுரம் பாதி சிதைந்து பாதிமட்டுமே எஞ்சி இருக்கின்றது.கோயிலின் சிறப்பம்சம்:எந்த கோயிலிலும் இல்லாத வகையில் இங்கு உத்தராயண வாசல் (வடக்கு வாசல்), தட்சிணாய வாசல் (தெற்கு வாசல்) என இரு வாசல்கள் உண்டு. தை முதல் ஆனி வரை உத்தராயண வாசல் வழியாகவும், ஆடி முதல் மார்கழி வரை தட்சினாய வாசல் வழியாக பெருமாளை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர்.
ஸ்ரீதேவி, பூதேவி, நீளாதேவி மூன்று நாச்சியார்களுக்கு மூன்று திவ்ய தேசங்கள் ஆதிபத்யம். இதில் ஸ்ரீதேவி நாச்சியாருக்கு ‘திருவெள்ளரை’.
இக்கோவிலுக்கு பெருமாள் தரிசிக்க செல்லும் பொழுது முதலில் 18 இருக்கும். இவை 18 பகவத்கீதை அத்யாயங்களை குறிக்கிறது. இதை ஏறிய உடன் ஒரு கிருஷ்ணர் சந்நிதி உள்ளது. இவரை சேவித்த பிறகே உள்ளே செல்ல வேண்டும். பின் வரும் 4 படிகள் 4 வேதங்களை குறிக்கிறது. பின் வரும் 5 படிகள் பஞ்சபூதங்களை குறிக்கிறது. பின் வரும் 8 படிகள் அஷ்டாக்க்ஷர மந்திரத்தை ( ஓம் நமோ நாராயணா ) குறிக்கிறது. பின் வரும் 24 படிகள் காயத்திரி மந்திரத்தில் உள்ள 24 எழுத்துக்களை குறிக்கிறது. இதற்கு பின்பே பெருமாளை சேவிக்க இயலும். அதாவது இத்தனை விஷயங்களை விட உயர்ந்தவர் இந்த பெருமாள்.
.
Copyright: 2023 Thiruvellarai - All Rights Reserved,